சேலம்: சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 47வது கோடை விழா, மலர் கண்காட்சி வரும் 22ம் தேதி தொடங்கும் என மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார். அதன்படி, வரும் 22ம் தேதி தொடங்கி, 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை வரை 5 நாட்களுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி கூறுகையில், ‘‘கோடை விழாவையொட்டி அண்ணா பூங்காவில், லட்சக்கணக்கான மலர்களைக் கொண்டு மலர் கண்காட்சியும், காய்கறி கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சிகள் அமைக்கப்படுகிறது. அத்துடன், அரிய புகைப்படக் கண்காட்சி, நாள்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள், செல்லப்பிராணிகள் கண்காட்சி, படகுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும், இளைஞர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படவுள்ளன’’ என்றார்.
Advertisement