Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுற்றுச்சூழலை பாதுகாப்போம்: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!!

டெல்லி: இந்த பரந்த பூமியையும், அதன் மீதுள்ள இயற்கை வளங்களையும் காப்பாற்றத் தேவைப்படும் அனைத்து சுற்றுச்சூழல் சார்ந்த நிகழ்வுகளையும் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த 'உலக சுற்றுச்சூழல் தினம்' கொண்டாடப்படுகிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது;

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு:

கிரகத்தைப் பாதுகாப்பதில் மக்கள் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். வளங்களைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நடத்தையை ஊக்குவிக்கவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். சுற்றுச்சூழலுக்கான ஒவ்வொரு செயலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. மேலும் நமது கூட்டு முயற்சிகள் எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான பூமிக்கு வழிவகுக்கும்.

பிரதமர் மோடி:

உலக சுற்றுச்சூழல் தினத்தில், நமது கிரகத்தைப் பாதுகாப்பதற்கும், நாம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதற்கும் நமது முயற்சிகளை ஆழப்படுத்துவோம். நமது சுற்றுச்சூழலை பசுமையாகவும் சிறப்பாகவும் மாற்ற அடிமட்டத்தில் பாடுபடும் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:

நம் சொகுசுக்காக இயற்கையை மாசுபடுத்தாமல், நம்மை வாழவைக்கும் இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம்!. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.