Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவு சார் நகரம் அமைப்பதற்கு நிலம் எடுக்கும் பணி தொடக்கம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ‘தமிழ்நாடு அறிவு சார் நகரம்’ அமைக்க நிலம் எடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே ஏனம்பாக்கம், கல்பட்டு, ஆவாஜிபேட்டை, எர்ணாங்குப்பம், மேல்மாளிகைப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 1,703 ஏக்கர் பரப்பளவில் ‘அறிவுசார் நகரம் திட்டம்’ கொண்டு வரப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, இந்த நகரம் அமைக்க நிலம் எடுக்கும் பணிகள் தற்போது தொடங்கபட்டுள்ளது.

இந்த நவீன அறிவு சார் நகரத்தில், பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள், திறன்மிகு மையங்கள், அறிவுசார் தொழிலகங்கள் அமைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முதற்கட்டமாக மேல்மாளிகைப்பட்டு கிராமத்தில் 17 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்தில் கிராம மக்கள் மாநெல்லூர் சிப்காட் தொழிற்பூங்கா மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கலாம். இந்த ஆட்சேபனை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் ஆக.22ம் தேதி விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.