சென்னை : பெண்களுக்கு வேலைவாய்ப்பை அதிகம் உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பினர் தங்கமணி கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, "பெண்களுக்கு அவரவர் ஊர்களிலேயே வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறோம். பெண்களுக்கு வேலைவாய்ப்பு, பாதுகாப்பை உறுதி செய்யும் அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. இந்தியாவில் தொழில் நிறுவனங்களில் அதிக பெண்கள் பணிபுரியும் மாநிலம் தமிழ்நாடு,"இவ்வாறு தெரிவித்தார்.
Advertisement


