சம்பல்: உத்தரபிரதேசம் சம்பல் மாவட்டத்தை சேர்ந்தவர் கோபால் மிஸ்ரா. இவரது மனைவி நைனா சர்மா. இவர்களுக்கு 4 வயதில் சிராக் என்ற மகனும், ஒன்றரை வயதில் கிருஷ்ணா என்ற குழந்தையும் உள்ளனர். நைனா சர்மாவுக்கு ஆஷிஷ் மிஸ்ரா என்பவருடன் தகாத உறவு இருந்துள்ளது. இதைத்தெரிந்து கொண்ட கோபால் மிஸ்ராவுக்கும், நைனா சர்மாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நைனா சர்மா, ஆஷிஷ் மிஸ்ரா இருவரும் சேர்ந்து கோல் மிஸ்ரா மற்றும் சிராக், கிருஷ்ணா ஆகியோரை பாலில் விஷம் கலந்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்து கோபால் மிஸ்ரா அளித்த புகாரின் அடிப்படையில் ஆஷிஷ் மிஸ்ரா, நைனா சர்மா இருவரும் கைது செய்யப்பட்டனர்.
Advertisement


