வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும்: தளி ராமச்சந்திரன் கோரிக்கை
தமிழக சட்டப் பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு தளி தொகுதி உறுப்பினர் ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) பேசியதாவது: சிபிஎஸ்சி பள்ளிகளை தொடங்க மாநில அரசின் அனுமதி தேவையில்லை, ஒன்றிய அரசின் அனுமதி வழங்கினால் போதும் என்று மாநில சுயாட்சிக்கு எதிராக கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்படுகிறது. பயிர் காப்பீடு தனியார் மூலம் வழங்கப்படுகிறது. அதை தனியாருக்கு வழங்காமல் அரசே வழங்க வேண்டும்.
தளி தொகுதியில் காட்டுபன்றி, யானைகளால், விவசாயிகளின் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைகிறது. அதற்கு வழங்கப்படுகிற நிவாரணம் என்பது போதுமானதாக இல்லை. எனவே, பயிர் காப்பீட்டு திட்டத்தில் வனவிலங்குகளால் ஏற்படுகிற சேதத்துக்கு காப்பீடு செய்ய அரசு அதை சேர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.