தண்டையார்பேட்டை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய 5வது நடைமேடையில் நேற்று முன்தினம் இரவு மங்களூரு விரைவு ரயில் வந்து நின்றது. அப்போது, சென்ட்ரல் ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முன்பதிவில்லா பெட்டியில் இருந்து சந்தேகத்திற்கிடமாக இறங்கிய வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவரது கைப்பையை சோதனை செய்ததில் கஞ்சா பார்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வாலிபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஈஷா ஹாக் (26) என்பதும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் கஞ்சா வாங்கிக்கொண்டு கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு ரயிலில் கஞ்சா கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் ஈஷா ஹாக் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Advertisement