Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மேற்கு வங்க ரயில் விபத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகள்: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

டார்ஜிலிங்: டார்ஜிலிங் மாவட்டம் பனிஷ்தேவா பகுதியில் நின்று கொண்டிருந்த கஞ்ஜன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்களானது. இதில், சரக்கு ரயிலின் ரயிலின் சில பெட்டிகள் தரம்புரண்டு விபத்துக்குள்ளானது. அதே போல் விரைவு ரயிலின் 3 பெட்டிகள் தரம்புரண்டது.

ரயில் விபத்தில் 30 பேர் காயம்

இந்த விபத்தில் தற்போது வரை 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 30 பேர் காயமடைந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் வடக்கு பெங்கால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணி

இந்த நிலையில் விபாடு தொடர்பாக ரயில்வே அமைச்சர் பேசியதாவது, இந்த விபத்து துருத்திஷ்ட வசமானது எனவும் மேற்கு வங்க ரயில் விபத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகள் நடைபெறும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார். ரயில்வே, தேசிய பேரிடர் மீட்புப் படை சம்பவ இடத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன. விபத்து நடந்த பகுதிக்கு ரயில்வே உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க ரயில் விபத்து -உதவி எண்கள் அறிவிப்பு

மேற்குவங்க ரயில் விபத்து குறித்து விவரம் அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய ரயில் பயணிகளின் விபரம் அறிய 03323508794, 03323833326 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.