Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வல்லம் பகுதியில் சம்பா வயலில் களையெடுக்கும் பணிகள் தீவிரம்

வல்லம்: தஞ்சாவூர் மாவட்டம், சித்திரக்குடி பகுதியில் மழை ஓய்ந்துள்ளதால், நெல்வயில் களையெடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி பணிகள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு மேட்டூரில் போதிய தண்ணீர் இல்லாததால் காலதாமதமாக திறக்கப்பட்டது. இதனால், தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, வல்லம், கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி உட்பட பகுதிகளில் ஆற்றுப் பாசனம் வாயிலாக சாகுபடி பணிகள் மேற்கொள்ளும் விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொள்ளவில்லை. இதற்கிடையில், மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் வர ஆரம்பித்தது.

இதையடுத்து ஆலக்குடி, கரம்பை உட்பட பகுதிகளில் விவசாயிகள் ஒருபோக சம்பா மற்றும் தளாடி சாகுபடி பணிகளில் மும்முரம் அடைந்தனர். தற்போது 40 நாட்களுக்கு மேல் ஆன சம்பா நெற் பயிர்கள் களையெடுத்து, உரமிட்டுள்ள நிலையில் பருவமழைபர வலாக பெய்துவரும்நிலை யில் பயிர்கள் நன்கு வளர் ந்து வருகிறது. இதற்கிடையில், கடந்த நான்கு நாட்களாக பெய்த மழையால் விவசாயத் தொழிலாளர்கள் வேலையின்றி அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று தஞ்சை சுற்றுப்பகுதிகளில் மழை ஓய்ந்த நிலையில், தஞ்சை அருகே ஆலக்குடி பகுதியில் விவசாயத் தொழிலாள ர்கள் கொட்டும் பனியில் சாகு படி வயல்களில் களை ப்பறிக்கும் பணியில் வெகு மும்முரமாக ஈடுபட்டனர்.