சென்னை: தமிழ் கலாச்சாரத்தை நாங்கள் மிகவும் மதிக்கிறோம் என ஸ்ரீபெரும்புதூரில் நடந்த விழாவில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேசி உள்ளார். ரயிலில் நீண்ட தூரத்தை அதிவேகமாக கடக்க ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முறையை சென்னை ஐஐடி மாணவர்கள் அண்மையில் உருவாக்கி இருந்தனர். இதுதொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சென்னை வந்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சென்னை ஐஐடி முன்னெடுத்துள்ள இந்த திட்டத்திற்கு இந்திய ரயில்வே உறுதுணையாக செயல்பட்டு வருகிறது. தமிழ் மொழி பாதுகாக்கப்பட வேண்டிய சொத்து. பாஜக அரசு அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. சென்னையில் தொழில்நுட்ப வளர்ச்சி நன்றாக உள்ளது என்று அவர் பாராட்டு தெரிவித்தார். உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவோம்.