கிருஷ்ணகிரி: பாரூர் பெரிய ஏரியிலிருந்து நாளை முதல் நவ.16 வரை 130 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ,போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து பாசனத்திற்காக ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல் ஐந்து நாட்களுக்கு நாற்றுவிட தண்ணீர் விட்டும் பிறகு முறைப்பாசனம் மூலம் 3 நாட்கள் மதகை திறந்துவிட்டும், 4 நாட்கள் மதகை மூடி வைத்தும் சுழற்சி முறையில் நாள் ஒன்றுக்கு 6.00 மில்லியன் கன அடி வீதம் நாளை முதல் நவம்பர் 16 வரை 130 நாட்களுக்கு மொத்தம் 361.00 மில்லியன் கன அடி (தற்போது 233.625 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது, மீதம் உள்ள 127.375 மில்லியன் கன அடி நீரினை எதிர்வரும் பருவமழையை கருத்தில் கொண்டு) முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ,போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள மொத்தம் 2397 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.
+
Advertisement