வக்பு வாரியத்தில் 17 ஆண்டுகளாக பணியாற்றி பணி நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்: ஜவாஹிருல்லா கோரிக்கை
சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வக்பு வாரியத்தில் கடந்த 2008 முதல் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டு 2018ல் நிரந்தமாக்கப்பட்ட 13 (தற்போது 10 பேர் மட்டும்) வக்பு வாரிய ஊழியர்கள், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அரசாணையைக் காரணம் காட்டி பணியிலிருந்து நிரந்தமாக விடுவிக்கப்பட்டனர்.
இதற்குப் பின்பு வக்புவாரிய ஊழியர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இடைக்கால தீர்ப்பில், பணிநீக்கத்திற்கு இடைக்காலத் தடை விதித்து மீண்டும் அவர்களை பணியமர்த்துமாறு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை வக்புவாரியம் செயல்படுத்தாததால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தனர்.
17 ஆண்டுகளாக வக்புவாரியத்தில் பணியாற்றியவர்களை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளவும், அவர்களின் பணி தகுதிக்கான காலத்தை அறிவிப்பு, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான சலுகை, பதவி உயர்வை வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


