சென்னை: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்தால், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று விடும். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்று. போலி வாக்காளர்கள் கண்டறியப்பட வேண்டிய தேவை உள்ளது. இரட்டை வாக்குகள் அகற்றப்பட வேண்டியதும் மிக முக்கியம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
+
Advertisement
