புதுடெல்லி: பீகாரில் தலைமை தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்கிறது. இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில்,‘‘ வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது சிறுபான்மையின மக்களின் வாக்குரிமையை பறிப்பதாகவுள்ளது. குறிப்பாக அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சடடமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதுபோன்ற நடவடிக்கையால் பல்லாயிரக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமை பறிபோகும்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


