புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 15வது நாளான நேற்று மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடங்கியது முதலே, எதிர்க்கட்சிகள் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டன. இதனையடுத்து முதலில் இரு அவைகளும் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன. 12 மணிக்கு அவை மீண்டும் கூடியபோதும் அமளி நீடித்ததால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. சபை ஒத்திவைக்கப்படுவதற்கு முன்பு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முந்தைய ‘வருமான-வரி மசோதா, 2025’ ஐ திரும்பப் பெற்றார். மாநிலங்களவையில் அவை நடவடிக்கை தொடங்கிய போது கர்நாடகாவில் நடந்த வாக்கு திருட்டு தொடர்பான பிரச்னையை காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி எழுப்ப முயன்றார். அதற்கு அவைத்தலைவர் அனுமதிக்காததால் அனைத்து எதிர்க்கட்சி எம்பிக்களும் எதிர்ப்பு கோஷம் எழுப்பினர். இதையடுத்து திங்கட்கிழமை காலை 11 மணிக்கு அவை கூடும் என்று அவை ஒத்திவைக்கப்பட்டது.
+
Advertisement