Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொடர் விடுமுறை எதிரொலி.. விவேகானந்தர் மண்டபத்துக்கு 3 நாட்களில் 20,000 பேர் வருகை: பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தகவல்!!

கன்னியாகுமரி: விவேகானந்தர் மண்டபத்துக்கு 3 நாட்களில் 20,000 பேர் வருகை தந்துள்ளனர் என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. விவேகானந்தர் நினைவு மண்டபம் தமிழ்நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் பாறையின் மேல் அமைந்துள்ளது. 1892ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி கன்னியாகுமரி வந்த விவேகானந்தர் கடலுக்குள் நீந்திச் சென்று அங்கிருந்த பாறையில் மூன்று நாட்கள் கடும் தவம் இருந்த இடத்தில் இம்மண்டபம் 2 செப்டம்பர் 1970 அன்று அமைக்கப்பட்டது.

கடலின் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையின் மேல் அமைக்கப்பட்டுள்ள இம்மண்டபத்தினுள் விவேகானந்தரின் முழு உருவ வெண்கலச் சிலையும், விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பின் பகுதியில் மண்டபத்தின் கீழே ஒரு தியான மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகில் ஜூன்-15, 16, 17 ஆகிய 3 நாட்களில் சுற்றுலா படகில் சென்று 20,000 பேர் கண்டு ரசித்துள்ளனர். வார விடுமுறை, பக்ரீத் பண்டிகை என 3 நாட்கள் தொடர் விடுமுறையை ஒட்டி குமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.