Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வைரலோ வைரல்

எதிர்நீச்சல் சீரியலுக்கு நிறைவு!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் நிறைவு பெற்றுள்ளது. சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் தங்கள் பதிவு மூலம் உறுதி செய்து வந்த நிலையில், நடிகை மதுமிதா ‘ நிறைவாக ஒரு புன்னகை ‘ என்று பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. சன் டிவியில் பிப்ரவரி 7, 2022-ல் ஒளிபரப்பாகத் தொடங்கிய எதிர்நீச்சல் சீரியல் விரைவில் முடிவடைய உள்ளது. இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களின் மனம் கவர்ந்த எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 8ம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டது.எதிர்நீச்சல் சீரியலில் சத்யப்பிரியா, வேல ராமமூர்த்தி, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, கனிகா, மதுமிதா, விபுராமன் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். எதிர்நீச்சல் சீரியல் முடிவடைய உள்ளதை இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் உறுதிப்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த சீரியல் மூலம்தான் மறைந்த ஹேய் இந்தாம்மா மாரிமுத்து மீம்கள், வீடியோக்கள் வரை வைரலானார். இதனாலேயே இந்த சீரியல் நிறைவால் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளையும், நினைவுகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்தியன் தாத்தா வர்றார்!

லைகா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப் படம் இந்தியன் 2. 1996 இல் வெளியான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம். அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகிவருகின்றன. அதில் ‘தாத்தா தான் வர்றாரு கதற வுட போறாரு '... என்கிற பாடல் இணையத்தில் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கின்றன. வித்தியாசமாகவும் பீட் பாடலாகவும் அனிருத் ரசிகர்களிடம் இப்பாடல் கவனம் பெற்றுவருகிறது. எனினும் இந்தியன் முதல் பாகத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் இப்போது வரை மெகா ஹிட் ரகமாக இருக்கும் பட்சத்தில் இன்னொரு புறம் விமர்சனங்களும்கூட வந்து கொண்டிருக்கின்றன. தற்சமயம் இணையத்தில் ‘இந்தியன் 2' திரைப்படம் பேசுபொருளாக மாறியிருக்கிறது.