விஐபி வழக்குகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வழக்கறிஞர்கள் ஆஜராகும் வகையில் விதிகளை வகுக்க கோரிய வழக்கு தள்ளுபடி
சென்னை: விஐபி வழக்குகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வழக்கறிஞர்கள் ஆஜராகும் வகையில் விதிகளை வகுக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக தொடர்ந்த வழக்கில் அண்ணாமலை 200 வழக்கறிஞர்களுடன் சைதை நீதிமன்றத்தில் நுழைந்ததாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது. விசாரணை நடைபெறும் போது குறிப்பிட்ட வழக்கறிஞர்கள் தான் வர வேண்டும் என்று எந்த சட்டத்திலும் இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.