திருச்சி: மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி, நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வேங்கைவயல் பிரச்னையில் முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் நீதி வழங்கும் அதிகாரம் ஐகோர்ட் வசம் உள்ளது. தகுந்த வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. வேங்கை வயல் கிராமத்துக்கு நடிகர் விஜய் வரவுள்ளார் என்பதற்காக அவசரமாக வழக்கு முடிக்கப்படுவதாக கூறுவது மிகச்சிறந்த ‘ஜோக்’. ஐகோர்ட் விசாரணை மேற்கொண்டு இப்பிரச்னையில் உரிய தீர்வு காணும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement