Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெறும் வயிற்றில் வெந்நீர் தரும் நன்மைகள்!

காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கும் போது இரவில் நமது உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி விடுகிறது. இதுவே நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் லேசான வெது வெதுப்பான நீரைப் பருகும் போது மலம் கழித்தல் சீராகுகிறது. நச்சுக்களை சிறு நீரின் வழியாக வெளியேற்றுகிறது. பசியை தூண்டு கிறது. தலைவலி வராமல் தடுக்கிறது.இது மட்டுமல்லாமல் இன்னும் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன.

மெட்டா பாலிசத்தை அதிகரித்தல்…

நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க நினைத்தால் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடியுங்கள். இது உங்கள் உடல் மெட்டா பாலிசத்தை 25% வரை அதிகரித்து உடல் எடையை குறைக்கிறது. செரிமான சக்தியை துரிதப்படுத்துவதால் உடல் எடையை வேகமாக குறைக்கமுடியும். மலம் கழித்தலை சீராக்குகிறதுகாலையில் வெறும் வயிற்றில் லேசான வெதுவெதுப்பான நீரைப் பருகும்போது மலக்குடல் சுத்தமாகி மலம் கழித்தலை சீராக்குகிறது. தினமும் காலையில் மலம் கழிக்கும் பழக்கத்தை கொண்டு வருகிறது. மேலும் உங்கள் உடலில் நச்சுக்களை சேர்த்தும் வெளியேற்றுகிறது. தண்ணீர் நமது உடலுக்கு மிகவும் முக்கியம். உடலில் நீர்ச்சத்தை சரியான அளவில் வைக்க இது உதவுகிறது. வெறும் வயிற்றில் நீர் குடிப்பதால் நமது நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து நம் உடலை தாக்கும் கிருமிகள் மற்றும் நோய்களுக்கு எதிராகச் செயல்படுகிறது. மேலும் ஒரு டம்ளர் தண்ணீரை பருகுவது நம்மை நோய்களின் தாக்குதல் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ உதவுகிறது.

தலைவலி தொல்லையிலிருந்து விடுபட…

உடல் போதுமான நீர்ச்சத்து இல்லாவிட்டால் அடிக்கடி தலைவலி தொல்லையால் அவதிப்பட நேரிடும். சிலருக்கு தூங்கி எழும் போதே தலைவலி பிரச்னைகள் இருப்பதைக் காணலாம். அதற்குக் காரணம் நீர்ச்சத்துக் குறைவே. குறிப்பாக மது குடிக்கும் நபர்களுக்கு உடலில் சூடு அதிகரித்து ஈரப்பதம் குறையும். அதனாலும் தலைவலி உண்டாகும். இதற்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் போது உடலுக்கு போதுமான நீர்ச்சத்து கிடைத்து தலைவலி வராமல் தடுக்கிறது. மேலும் உங்கள் பல் பிரச்னைகளிலிருந்தும் விடுதலை தருகிறது.

பசியை அதிகரித்தல்

நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் பசியும் அதிகரிக்கும். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும்போது குடலில் உள்ள நச்சுக்கள் கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றிவிடுவதால் நமக்கு வயிறு நன்றாக பசிக்கும்.சருமத்தை அழகாக்க உதவுகிறதுகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் அழகான பொலிவான சருமத்தை பெறலாம். கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை நமது சருமத்தில் தங்கியுள்ள நச்சுக்களால் ஏற்படுகின்றன. எனவே காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும்போது அந்த நச்சுக்கள் எல்லாம் வெளியேற்றப்படுவதால் இது போன்ற சருமப் பிரச்னைகள் எட்டிப் பார்ப்பதில்லை. இதனால் ஆரோக்கியமான பொலிவான சருமத்தை பெற இயலும்.

குடலைச் சுத்தம் செய்தல்…

காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் பருகும்போது நமது உடல் பாதையில் உள்ள கழிவுகள் நச்சுக்கள் எல்லாம் வெளியேற்றப்படுகின்றன. மேலும் நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை நமது குடல் சீக்கிரமாக உறிஞ்சிக் கொள்ள இந்த பழக்கம் உதவுகிறது. இதன்மூலம் குடலில் ஏற்படும் கொடிய நோய் அபாயத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளமுடியும்.

உடல் ஆற்றலை அதிகரிக்கிறது

நீங்கள் காலையில் எழும்போதே ரொம்ப களைப்பாக சோம்பேறியாக உணர்ந்தால் வெறும் வயிற்றில் ஒரு

டம்ளர் வெதுவெதுப்பான நீரை மட்டும் குடியுங்கள். இதனால் உங்கள் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் வளர்ச்சி அதிகரித்து இரத்தத்திற்கு அதிகப்படியான ஆக்ஸிஜன் செல்கிறது. இதன் மூலம் அந்த நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாக உற்சாகமாக செயல்பட முடியும்.

எடையை குறைக்க உதவுகிறது

நம் எல்லாருக்குமே தெரியும் தண்ணீருக்கு கலோரி கிடையாது என்பது. எனவே இந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் போது நீங்கள் எதிர்பார்க்காத வகையில் உடல் எடையை குறைக்க முடியும். மேலும் போதுமான இடைவெளியில் தண்ணீர் குடித்து வரும் போது வயிறு நிறைந்து நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவது போன்றவை கட்டுப்படுத்தப்படும். இதனாலும் எடையை எளிதாக குறைக்க முடியும். மேலும் போதுமான தண்ணீர் நமது உடலின் மெட்டாபாலிசத்தை அதிகரித்து கொழுப்புகளைக் கரைக்கிறது. குறிப்பாக வெளிப்புற உணவுகள் அதிகம் உண்ணும் பழக்கம் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய அருமருந்து நீர்தான். என்னதான் சுத்தமாக சமைத்தாலும், கிழங்கு மாவு, மைதா, வினிகர், அஜினோமோட்டோ, சோடா என அனைத்தும் ஹோட்டல் உணவுகளில் இருக்கும் பட்சத்தில் நிறைய நீர் அருந்துவது நச்சுகளை வெளியேற்றி உடலை தூய்மையாக வைத்திருக்கும்.

- கவிதா சரவணன்