Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வேலூர் மாவட்டத்தில் நிலங்களை வரன்முறை செய்து 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார் முதலமைச்சர்

வேலூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , வேலூர் மாவட்டத்தில் ஒருமுறை சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ், நிலங்களை வரன்முறை செய்து 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (25.6.2025) வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேலூர் மாவட்ட வருவாய் வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசித்து வரும் நபர்களுக்கு ஒருமுறை சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ், நிலங்களை வரன்முறை செய்து 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் அடையாளமாக 12 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

அதன்படி, ஒருமுறை சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ், வருவாய் நிலையாணை எண்.21(6)-ன்படி கிராம நத்தமாக வகைபாடு மாற்றம் செய்து வழங்கப்பட்ட பட்டா 2074, அரசாணை நிலை எண் 318-ன்படி 5 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டா (நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகள் தவிர) 1330, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் கிரையம் பெற்றவர்களுக்கு உட்பிரிவு செய்து வழங்கப்பட்ட பட்டா 10,000, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கிரையம் பெற்றவர்களுக்கு உட்பிவு செய்து வழங்கப்பட்ட பட்டா 212, அரசாணை நிலை எண் 612-ன்படி, சர்க்கார் மனை வகைபாட்டிலிருந்து இரயத்துமனைகளாக மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்ட பட்டா 240, ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் பட்டா வழங்கப்பட்டு தற்போது இணையவழியில் வழங்கப்பட்ட பட்டா 4,525, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் பட்டா வழங்கப்பட்டு தற்போது இணையவழியில் வழங்கப்பட்ட பட்டா 1,473, அரசாணை நிலை எண் 97-ன்படி, நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு வரன்முறை செய்து வழங்கப்பட்ட பட்டா 1922, என மொத்தம் 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வரசு பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் வேலூர் மாவட்ட வருவாய் வட்டங்களில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கான இணையவழி பட்டா மற்றும் நத்தம் வகைபாடு உள்ளிட்ட அனைத்து இனங்களில் 18,035 பட்டாக்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் வழங்கப்பட்ட 21,776 பட்டாக்களையும் சேர்த்து மொத்தம் 39,811 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ். ஜெகத்ரட்சகன். கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள். வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.