Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி - வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னேற்றம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

சென்னை: ஆண்டுதோறும் தகவல் தொழில் நுட்பம், வாகன உற்பத்தியில் தமிழகம் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளனர்.ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு சார்பில் பிஸ் பெஸ்ட் காங்க்ளேவ் 2025 தொழில் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து முன்னணி தொழில்துறையினர், நிறுவனர், தலைமை நிர்வாகிகள் மற்றும் நிபுணர்கள் பங்கேற்ற இந்த மாநாடு, தொழில் வளர்ச்சிக்கான புதிய வழிகளைக் கண்டறிந்தது.மின்சாரம், ரியல் எஸ்டேட், எஃகு & கட்டுமானப் பொருட்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், உடை, காகிதம் மற்றும் பேக்கேஜ் தொழில், துணைத் துறைகள் மற்றும் விளையாட்டு போன்ற முக்கிய தொழில் துறைகளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த மாநாட்டில் சுமார் 500 தொழில்முனைவோர் பங்கேற்றனர்.இதில் முதன்மை விருந்தினராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு மாநாட்டினைத் தொடங்கி வைத்தார். கௌரவ விருந்தினராக ராஜஸ்தான் கூட்டுறவு அமைச்சர் கவுதம் குமார் கலந்து கொண்டார். இவ்விழாவில் புத்தக வெளியீடு“Rajasthanis in Tamil Nadu - 100 Years of Legacy” என்ற நூலை வெளியிட்டு இதன் முதல் பிரதி தமிழ்நாடு ராஜஸ்தானி அசோசியேஷன் தலைவர் நரேந்திர ஸ்ரீஸ்ரீமல் இரு அமைச்சர்களுக்கும் வழங்கினார். ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு உடன் இணைந்து, இந்த மாநாட்டை ஸ்ரீ மகேஸ்வரி சபா மற்றும் அக்ராட்ரேட் இணைந்து நடத்தின.

இதில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: “தமிழ்நாட்டின் வரலாற்றில் ராஜஸ்தானி சமூகத்தின் பங்களிப்பு தொழிலும் வாணிபத்திலும் முக்கியமானது.பிஸ் பெஸ்ட் காங்க்ளேவ் 2025 தொழில் மாநாடு மூன்று அமைப்புகளின் இணைப்பாக நடைபெற்றது - ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு, மகேஷ்வரி சபா மற்றும் ஆகர்ட்ரேட். இவர்களுக்கு எனது ஆழ்ந்த பாராட்டு.தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு ஆதாரமாக என் கட்சியின் நிறுவனர் அண்ணாதுரை அவர்கள் அமைத்த மதிப்புக் கோட்பாடு இன்று ஒரு தூணாக நிற்கிறது. தற்போது மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 11.19% ஆக உள்ளது, இது பல மாநிலங்களை விட உயர்வானது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், வாகன மற்றும் உற்பத்தித் துறைகளில் ஆண்டு தோறும் சிறப்பான முன்னேற்றம் காணப்படுகிறது.ராஜஸ்தானி மற்றும் தமிழ் சமூகங்களுக்கிடையே மிகுந்த உறவு மற்றும் பரஸ்பர மரியாதை காணப்படுகிறது. இந்நிலம் சமத்துவம், பண்பு, சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றால் சிறந்து விளங்குகிறது. எனவே, இளம் தலைமுறையை தொழில் முனைவர்களாக உருவாக்குவது இந்நேரத்தின் அவசியமாகும். செயற்கை நுண்ணறிவு காலத்தில், இளைஞர்கள் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு ஏற்ற வகையில் திறன் பெற வேண்டும். இது எதிர்காலத் தொழில்முனைவர்கள் மற்றும் திறமையான பணியாளர்கள் உருவாக வழிவகுக்கும்.

"ஜியோ நிறுவனத்தின் மனிதவள துணைத் தலைமை அதிகாரி ஹர்ஜீத் கந்தூஜா பேசுகையில் ‘‘ 2030 ஆம் ஆண்டுக்குள் இந்திய பணியாளர் படையின் 60% ஜெனரேஷன் Z ஆக இருக்கும். இந்த தலைமுறையின் எதிர்பார்ப்புகள் வேகமாக மாறி வருகின்றன - அவர்கள் வேலைப்பிரிவிலும் வாழ்க்கை முறையிலும் வித்தியாசமான சுதந்திரத்தையும், தேர்வுகளையும் எதிர்பார்க்கிறார்கள். ஆன்லைன் உணவு டெலிவரி போன்ற விரைவு வணிக சேவைகள் அவர்களின் வாழ்க்கையில் இடம்பிடித்துள்ளன. எதிர்கால பணியாளர்களை வழிநடத்த நாம் அவர்களுக்கான வேலை முறை சுதந்திரத்தை (அலுவலகம், வீட்டிலிருந்து, அல்லது கலப்பு முறை) தனிப்பயனாக்க வேண்டும்.”இந்த மாநாடு ராஜஸ்தானி மற்றும் தமிழ் வணிக சமூகங்களை இணைக்கும் ஒரு புதிய தளத்தை உருவாக்கி, எதிர்கால தொழில் வளர்ச்சிக்கான முக்கிய பங்களிப்பைச் செய்தது.

இந்திய அரசின் முன்னாள் ஜி20 ஷெர்பா அமிதாப் காந்த் பேசுகையில் :

MSME நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு அவசியமாகும். வேகமான முன்னேற்றத்தை அடைந்த நாடுகள் சுதந்திர வணிகத்தை ஊக்குவித்து வளர்ந்துள்ளன. தனியார் துறையினரே செல்வம் உருவாக்கி, நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்து வருகின்றனர்,” என்றார்.அரசின் பங்கு கொள்கைகளை வடிவமைத்து, மாநிலங்களுக்கு பொறுப்பளித்து, அவற்றை மேலும் சுதந்திரப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், “2047-க்குள் ‘விக்சித் பாரத்’ நோக்கை அடைய ஆண்டுக்கு குறைந்தது 8 முதல் 9 சதவீத வளர்ச்சியைத் தக்க வைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.அவர் தொழில்முனைவோர்களை நோக்கி, “தனிப்பட்ட முன்னேற்றக் காட்சியை வைத்துக் கொண்டு வருடாந்திர இலக்குகளை நிர்ணயித்து செயல்பட்டால் நாட்டின் முன்னேற்றப் பயணத்தில் முழுமையாக பங்களிக்க முடியும்” என கூறினார்.ரூபாய் மதிப்பு குறைவது பற்றிய கேள்வியை நோக்கி, “ரூபாய் தன்னிச்சையாக சந்தையில் தனது நிலையை அடைய அனுமதிக்கப்பட வேண்டும். ஜப்பான், சீனா, கொரியா போன்ற நாடுகள் தங்கள் நாணய மதிப்பில் தளர்வை ஏற்படுத்தி ஏற்றுமதியில் சிறந்து விளங்கின” என்றும் எடுத்துக்காட்டினார்.மேலும், “கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பெரும் அளவில் முதலீடுகள் செய்து வருவது இந்தியாவின் பொருளாதார வலிமையை வெளிப்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

ஜொன்டி ரோட்ஸ் பேசகையில்:

லைஃப் பை ஜொன்டி நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் உயர் செயல்திறன் பயிற்சியாளர் ஜொன்டி ரோட்ஸ் அவர்கள் உரையாற்றியபோது கூறினார்:"எனது வாழ்க்கையை மாற்றியவர்கள் ஒரு கேமராமேன் மற்றும் இன்ஸமாம்-உல்-ஹக். வெற்றியை நோக்கி பயணிக்க மனப்பாங்கே முக்கியம்; முடிவை விட செயல்முறையில் கவனம் செலுத்த வேண்டும். புதுமை, மாற்றத்திற்கான துணிவு மற்றும் புதிய சிந்தனை வெற்றியின் அடிப்படைகள்,” என்றார்.சிரித்து, “எனது பிடித்த பொழுதுபோக்கு தூங்குவது. கிரிக்கெட்டில் இல்லாவிட்டால் நான் ஒரு ஆசிரியராக இருந்திருப்பேன்,” என்றார். மேலும், தனது பிடித்த வீரர் பிரேசிலின் கால்பந்து நாயகன் பெலே எனவும் தெரிவித்தார்.இந்திய கிரிக்கெட்டை பாராட்டிய அவர், “IPL புதிதாக உருவாகும் வீரர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்த சிறந்த தளம். தமிழகத்தின் TNPL, கர்நாடகாவின் KPL போன்ற பிராந்திய லீகுகள் உருவாகி வருவது ஊக்கமூட்டும் மாற்றமாகும்,” என்றும் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு ராஜஸ்தானி சங்கத்தின் தலைவர் நரேந்திரா ஸ்ரீஸ்ரீமல் அவர்கள் தெரிவித்ததாவது:“இந்த முதல் ‘பிஸ் பெஸ்ட் காங்க்ளேவ் 2025’ நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைத்து அனுசரணையாளர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. பங்கேற்பாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, கேள்விகள் எழுப்பி, நிகழ்வை பயனுள்ளதாக ஆக்கியது பெருமையாகும்,” என்றார்.