Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றது இரட்டிப்பு மகிழ்ச்சி: கேரள முதல்வர் பிரனாயி விஜயன்!!

சென்னை: வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் பினராயி விஜயன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;

பெரியாருக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் புகழாரம்

முற்போக்கு சிந்தனைக்கு எதிராக அந்தக் காலத்தில் காங். தலைவர்கள் சிலர் செயல்பட்டதால் அக்கட்சியில் இருந்தே வெளியேறியவர் பெரியார். தமிழ்நாட்டில் 1952-ல் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற வெற்றிக்கு பின்னால் பெரியார் இருந்தார். தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கும் பெரியாருக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. சமூக நீதியை காக்கவும் சாதி பாகுபாட்டை எதிர்க்கவும் குடியரசு எனும் பத்திரிகையை நடத்தினார் பெரியார் என்று அவர் கூறினார்.

சமூக நீதி காவலராக பெரியார் திகழ்ந்தார் பெரியார்: பினராயி விஜயன்

சமூக நீதி காவலராக பெரியார் திகழ்ந்தார் பெரியார். மதம், கடவுளின் பெயரில் மக்களுக்கு கல்வி தடுக்கப்பட்டதை கடுமையாக எதிர்த்தார் பெரியார். சோவியத் ரஷ்யா சென்ற பெரியார் அங்கு 3 மாதம் தங்கியிருந்தார். சோசலிச ஆட்சி நடைபெற்ற சோவியத் ரஷ்யாவில் உயர்வு, தாழ்வு இல்லை என்பதை நேரில் பார்த்தவர் பெரியார். சமத்துவத்தை வலியுறுத்தி பேசிய பெரியார், அதன் வழியிலேயே செயல்பட்டதில் வியப்பு ஒன்றும் இல்லை. சமூக நீதி என்ற மையப்பொருளைக் கொண்டு அனைவருக்கும் சமத்துவம், சுதந்திரம் போன்றவற்றை வலியுறுத்தியவர் பெரியார்.

மேலும், வர்ணாசிரம கோட்பாடுகளை தனது கொள்கைகளால் முறியடித்தவர் பெரியார். வைக்கம் கோவில் வளாக பாதையில் ஒடுக்கப்பட்டோர் நடக்கும் உரிமையை பெற்றுத் தர நடந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கினார் பெரியார். பெரியாரை திருவிதாங்கூர் சமஸ்தான அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. தான் மட்டுமின்றி தனது குடும்பத்தை சேர்ந்த பெண்களையும் போராட்டத்தில் பங்கேற்க வைத்தார் பெரியார். மகாராஷ்டிராவில் ஜோதிபாய் பூலே, சாவித்ரிபாய் பூலேவைப் போல் தமிழ்நாட்டில் பெரியார் - நாகம்மை தம்பதி போராடியது. என்று கேரள முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார்.