சென்னை : 68.5 அடியை எட்டியதை அடுத்து வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணைக்கு நீர்வரத்து 1,594 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 769 கன அடியாகவும் உள்ளது. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 68.5 அடியாக தற்போது உள்ளது.
+
Advertisement