மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,175 கனஅடியில் இருந்து 7,769 கனஅடியாக சரிவு
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,175 கனஅடியில் இருந்து 7,769 கனஅடியாக சரிந்தது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக விநாடிக்கு 18,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. டெல்டா பாசனத்துக்காக 18,000 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாயில் 500 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.22 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு...
பீகாரில் ராகுல் - தேஜஸ்வி நடைபயண யாத்திரை ஒத்திவைப்பு
டெல்லி: பீகாரில் ராகுல் - தேஜஸ்வி இணைந்து ஆக.10ல் தொடங்க திட்டமிட்டிருந்த நடைபயண யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் வோட் அதிகார் யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆர்.ஜே.டி. அறிவித்துள்ளது. நடைபயணத்துக்கான புதிய தேதி குறித்த அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியாகும் என்றும் ஆர்.ஜே.டி. தகவல் தெரிவித்துள்ளது. ...
உத்தரகாண்டில் ஏற்பட்ட மலைச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு பிரதமர் இரங்கல்
உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் ஏற்பட்ட மலைச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். "உத்தர்காசி நிலைமை குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் கேட்டறிந்தேன். மாநில அரசின் கண்காணிப்பில் மீட்பு, நிவாரண குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.எந்த ஒருவருக்கும் உதவிகள் விடுபடாமல் இருக்கும்படி செயலாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது" என பிரதமர் மோடி...
கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!!
சென்னை: கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்துள்ளார். துணைவேந்தர் நியமனம், யுஜிசி விதிகள் தொடர்பான வழக்குகளை காரணம்காட்டி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியது. கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா கடந்த ஏப்ரல் 28ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. கலைஞர்...
ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ஐகோர்ட் அனுமதி
சென்னை: ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியின் பட்டியலின பிரிவுக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நாளை (ஆகஸ்ட் 6) அனுமதி வழங்கும்படி காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ...
உத்தரகாசியில் தரலி என்ற இடத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு!
உத்தராகண்ட்: உத்தரகாசியில் தரலி என்ற இடத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில் காணாமல் போன பலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கீர் கங்கா ஆற்றில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கால் பலர் மண்ணில் புதையுண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
ஆக.14ம் தேதி தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது
சென்னை: ஆக.14ல் தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் முக்கிய திட்டங்கள் மற்றும் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆலோசனை எனத் தகவல் வெளியாகியுள்ளது. ...
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.'சத்யபால் மாலிக் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். சத்யபால் மாலிக் வகித்த பதவிகள் மட்டுமல்ல, அவர் எடுத்த முடிவுகளும் என்றும் நினைவில் இருக்கும்' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ...
சென்னை போன்ற மெட்ரோ பகுதிகளில் ஆவின் பால் விற்பனை 30% உயர்ந்துள்ளது: பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
சென்னை: சென்னை போன்ற மெட்ரோ பகுதிகளில் ஆவின் பால் விற்பனை 30% உயர்ந்துள்ளது என்று பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி அளித்துள்ளார். கடந்த ஆண்டு மொத்தம் ரூ.25 கோடிக்கு விற்பனையான நிலையில், இந்த ஆண்டு சுமார் ரூ. 33 கோடிக்கு விற்பனை ஆகிறது. தமிழ்நாடு முழுவதும் ஆவின் பாலகங்களில் சப்லை செயின்-ஐ...