Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வடக்கந்தரை திருப்புராய்க்கல் பகவதி அம்மன் கோயில் திருவிழா கோலாகலம்

பாலக்காடு : பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற வடக்கந்தரை திருப்புராய்க்கல் பகவதி அம்மன் கோயிலில் கடந்த 23ம் தேதி கும்மாட்டி திருவிழாவுடன் நிகழ்ச்சிகள் துவங்கின. தொடர்ந்து 15 நாட்களும் அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்று வந்தன. நேற்று முன்தினம் கோயில் வளாகத்தில் யானைகளுக்கு அலங்கரிக்கப்படுகிற அணி கலன்கள் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை 4 மணிக்கு கோயில் நடைத்திறக்கப்பட்டு அம்மனுக்கு விஷேச அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து நாதஸ்வர கச்சேரியுடன் அம்மனுக்கு நிவேத்ய உருளி எழுந்தருளல் மற்றும் 11 யானைகள் அலங்காரத்துடன் கோயில் மைதானத்தில் காழ்ச்சஸ்ரீவேலி பஞ்சவாத்யம் முழங்க யானைகள் மீது அம்மன் பவனி வந்தார். மதியம் 12 மணிக்கு உச்சிக்காலப்பூஜை, தாயம்பகா வாத்தியம் ஆகியவை நடைபெற்றது. இதனையடுத்து மாலை 4 மணிக்கு பாலக்காடு பெரியகடைவீதி சந்திப்பு அம்மன் கோயிலில் இருந்து யானைகள் ஊர்வலம் புறப்பட்டு பாலக்காடு நகரவீதியில் அம்மன் ஊர்வலம் யானை மீது பஞ்சவாத்யங்களுடன் நடைபெற்றது.

இதற்கிடையில் வேடங்கள் தரித்த நாட்டிய கலைஞர்களின் நாட்டியம், காவடியாட்டம், நையாண்டி மேளம், நாட்டுப்புற பாடல் நாட்டியம் ஆகியவை இடம்பெற்றன. நாளை அதிகாலை 3 மணிக்கு கோயில் மைதானத்தில் கம்பம் பூத்திரி மத்தாப்பூகள் வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடக்கிறது.