பாரபங்கி: உத்தரப்பிரதேசத்தின் பாரபங்கியில் லோதேஸ்வர் மகாதேவ் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்குள் தலித் சமூகத்தை சேர்ந்த சைலேந்திரா என்பவர் தனது குடும்பத்தினரோடு செல்ல முயன்றதாக தெரிகிறது. ஆனால் அவரை கோயில் பூசாரியான ஆதித்ய திவாரி தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது. பூசாரி தன்னை கோயிலுக்குள் செல்ல விடாமல் தடுத்ததாகவும், தன்னை அடித்து, சாதிய வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து இரு தரப்பினரும் ராம்நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். கோயில் பூசாரி தனது புகாரில், எனது மகனும், மருமகளும் கோயிலில் சாமி தரிசனம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது சைலேந்திரா எனது மருமகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனை எனது மகன் எதிர்த்தபோது அவரை அடித்து துஷ்பிரயோகம் செய்தார் என்று தெரிவித்துள்ளார். இருதரப்பு புகாரையும் பெற்ற போலீசார் கோயிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
Advertisement