உ.பி.யில் மாணவர்கள் குறைவாக இருப்பதாகக் கூறி அரசு பள்ளிகளை மூடும் நடவடிக்கைக்கு பிரியங்கா காந்தி எதிர்ப்பு
டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் மாணவர்கள் குறைவாக இருப்பதாகக் கூறி 5,000 அரசு பள்ளிகளை மூடும் நடவடிக்கைக்கு பிரியங்கா காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 50 பேருக்கு குறைவாக உள்ள பள்ளிகளை மூடி அருகில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க உ.பி. அரசு திட்டம் எனவும் உ.பி. பாஜக அரசின் முடிவு கல்வி உரிமைச் சட்டம், தலித், ஏழை மாணவர்களுக்கு எதிரானது எனவும் பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளார்.