ஜெய்ப்பூர்: அமெரிக்க துணை அதிபரான ஜேடி வான்ஸ், தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் கடந்த திங்களன்று இந்தியா வந்தார். டெல்லி வந்த அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர். முன்னதாக அஷர்தாம் கோயிலுக்கு சென்றனர். அன்றிரவு ஜெய்ப்பூர் வந்தனர். செவ்வாயன்று அம்பர் கோட்டையை அவர்கள் பார்வையிட்டனர். பின்னர் நேற்று முன்தினம் ஆக்ரா சென்ற அவர்கள் தாஜ்மகாலை கண்டு வியந்தனர். இதனை தொடர்ந்து நேற்று அவர்கள் தங்களது இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா புறப்பட்டுச்சென்றனர்.
Advertisement


