சென்னை: ஒன்றிய அரசைக் கண்டித்து நாளை மறுநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தொழிலாளர் முன்னேற்ற சங்கம் அறிவித்துள்ளது. நாளை மறுநாள் நடைபெறும் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் 13 தொழிற்சங்கங்கள் பங்கேற்கும். தமிழ்நாட்டில் தொமுச, சிஐடியு, ஐஎன்டியுசி உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பேருந்து,, ஆட்டோர் ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் நாளை மறுநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். நாளை மறுநாள் ஆட்டோக்கள், பேருந்துகள் இயங்காது எனவும் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் அறிவித்தது.
Advertisement