உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களுக்கு விண்ணப்பம் விநியோகம் தொடக்கம் : மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட 43 சேவைகளை வழங்க நடவடிக்கை!!
சென்னை : உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக விண்ணப்பம் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது. ‘உங்களுடன் ஸ்டாலின்' முகாம் ஜூலை 15 தொடங்க உள்ள நிலையில், 1 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக விண்ணப்பங்கள், தகவல் கையேடுகள் விநியோகிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட 43 திட்டங்களுக்கான கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் விதமாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் கடைக்கோடி மக்களுக்கும் அரசுத் துறை சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் நோக்கமாகும்.



