Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

எல்லாமே உல்டாவா...மோடியை கலாய்த்த காங்கிரஸ்

புதுடெல்லி: பேசுவது மேட் இன் இந்தியா, பயன்படுத்துவது எல்லாம் வெளிநாட்டு பொருளா என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள பிரிவு தலைவர் சுப்ரியா ஷிரினேட் இதுபற்றி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: சிறிய கண்கள் கொண்ட விநாயகர் சிலையைக் குறிப்பிட்டு, சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பற்றிப் பிரதமர் மோடி பேசுகிறார். நாட்டு மக்களிடம் உள்நாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தச் சொல்கிறார். அது மிகவும் நல்ல விஷயம். ஆனா மோடிஜி ஒரு விஷயம் சொல்லுங்க.

* நீங்கள் சீனாவுடனான வர்த்தகத்தை தொடர்ந்து அதிகரித்தீர்கள், இது எங்களுக்கிடையேயான வர்த்தக பற்றாக்குறையை ரூ.8.50 லட்சம் கோடியாக அதிகரித்தது - அதற்கு யார் பதில் சொல்வார்கள்?

* நீங்களே ஏன் பிஎம்டபிள்யூ, மெர்சிடெஸ் போன்ற வெளிநாட்டு கார்களைப் பயன்படுத்துகிறீர்கள்?

* நீங்கள் ஏன் மான்ட்பிளாங்க் பேனாவைப் பயன்படுத்துகிறீர்கள்?

* உங்க கைக்கடிகாரம் ஏன் மொவாடோல இருந்து வந்தது?

* உங்க கண்ணாடி ஏன் மேபேக் மற்றும் பிவல்காரியில் இருந்து வந்தது?

* நீங்கள் ஏன் ஆப்பிள் போனை பயன்படுத்துகிறீர்கள்?

உங்கள் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் பகலுக்கும் இரவுக்கும் உள்ள வித்தியாசம் எவ்வளவு இருக்கிறதோ அதே அளவு வித்தியாசம் இருக்கிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ள அவர், மோடி பயன்படுத்தும் படங்களையும் பதிவிட்டுள்ளார்.