சென்னை: உத்தவ் தாக்கரே பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது :
சிவ சேனா (உத்தவ் தாக்கரே) தலைவர் திரு. உத்தவ் தாக்கரே அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். இந்தித் திணிப்புக்கு எதிரான தங்களது துணிச்சலான எதிர்ப்பும், மகாராஷ்டிராவின் அடையாளத்தை உறுதியாக உயர்த்திப் பிடித்ததுமே மராட்டிய மக்களைத் தங்கள் மொழிக்காக ஓரணியில் இணைத்துள்ளது. கூட்டாட்சியியலையும் மொழியின் மாண்பையும் பாதுகாக்கும் தங்களது பயணம் வலிமையோடு தொடர விழைகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.