சென்னை: தவெகவில் மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தவெக தகவல் தொழில்நுட்ப அணிக்கு மாவட்ட அளவில் புதிய பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் சார்பு அணிகள் உருவாக்கப்பட்டு அதற்கான புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் தவெக தகவல் தொழில்நுட்ப அணிக்கு மாநில அளவிலும், மண்டல அளவிலும் புதிய பொறுப்பாளர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, மாவட்ட அளவில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, சென்னை கிழக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளராக பாலமுருகனும், ஒருங்கிணைப்பாளராக தங்கபாலு மற்றும் 10 இணை ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று சென்னை தெற்கு (தெற்கு) மாவட்ட செயலாளராக தாமோதரனும், சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளராக சபரிநாதனும், சென்னை தெற்கு (வடக்கு) மாவட்ட செயலாளராக அப்புனுவும், சென்னை புறநகர் மாவட்ட செயலாளராக இசிஆர் சரவணனும், சென்னை மத்திய மாவட்ட செயலாளராக எஸ்.கே.எம்.குமாரும், சென்னை மத்திய (தெற்கு) மாவட்ட செயலாளராக திலீப்குமாரும், சென்னை மத்தியம் (மேற்கு) மாவட்ட செயலாளராக ஏ.எஸ்.பழனியும், சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளராக வேலுவும், சென்னை வடக்கு (தெற்கு) மாவட்ட செயலாளராக விஜயராகவனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் ஒரு ஒருங்கிணைப்பாளரும், 10 இணை ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.