Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் அலகு அமைக்க ரூ.36,238 கோடி முதலீடு செய்கிறது சிங்கப்பூர் செம்கார்ப் நிறுவனம்!!

தூத்துக்குடி : தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் அலகு அமைக்க ரூ.36,238 கோடி முதலீடு செய்கிறது சிங்கப்பூரைச் சேர்ந்த செம்கார்ப் நிறுவனம். தூத்துக்குடி மாவட்டத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி தளம் அமைப்பதற்காக, சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.36,238 கோடி முதலீடு செய்ய, இவ்வாண்டு தொடக்கத்தில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது உற்பத்தி தளம் அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன.

தூத்துக்குடியில் தற்போது பசுமை ஹைட்ரஜன் தயாரிக்க ACME நிறுவனம் 52,000 கோடி ரூபாயும், Petronas நிறுவனம் 34,000 கோடி ரூபாயும், Sembicorp நிறுவனம் 36,238 கோடி ரூபாயும், Leap Green Energy நிறுவனம் 22,842 கோடி ரூபாயும் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. தூத்துக்குடி கிரீன் ஹைட்ரஜன் திட்டம் மூலம் தூத்துக்குடி பகுதியில் சுமார் 1511 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பசுமை ஹைட்ரஜனை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சோஜிட்ஸ் கார்ப் (Sojitz Corp) மற்றும் கியூஷு எலக்ட்ரிக் பவர் (Kyushu Electric Power) உள்ளிட்ட ஜப்பான் நிறுவனங்களுடன் செம்ப்கார்ப் இணைந்துள்ளது.