மதுராந்தகம்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மதுராந்தகம் சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. இதில், தமிழ்நாடு இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பின் மாநில தலைவர் ஜி.முனுசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட நிழல் தரக்கூடிய மரக்கன்றுகள் நடப்பட்டு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், தமிழ்நாடு இயற்கை சுற்றுச்சூழல் வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.மதி, மாவட்ட செயலாளர் இராவத்த நல்லூர் தனசேகரன், பேச்சாளர் முனைவர் தங்கபெரு.தமிழமுதன், தமிழ்நாடு செயற்குழு உறுப்பினர் என்.யுவராஜ், எம்.கருணாநிதி தலைமை ஆசிரியர் ஸ்டிபன், துணை தலைமை ஆசிரியர் கிருபாசாந்தி, ஆசிரியர்கள் ஷீபாரோஸ்லின், பிரமிளாஞானகுமாரி, பிரான்சிஸ்ஜெயக்குமார் உட்பட மாணவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
+
Advertisement