தடம்-தமிழ் நாட்டின் பொக்கிஷங்கள் எனும் பெட்டியினை அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு நினைவு பரிசாக வழங்கியது பெருமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு
சென்னை: அமெரிக்காவில் முதலீட்டாளர்களுக்கு பரிசளித்தது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது: நமது உள்ளூர் கைவினைக் கலைஞர்களுக்கு ஊக்கமளிப்பதற்காக ‘ஸ்டார்ட்-அப் தமிழ்நாடு’-இன் ‘தடம்’ எனும் முக்கிய முன்னெடுப்பை அறிமுகம் செய்தபோது, அமெரிக்காவில் நான் சந்தித்த முதலீட்டாளர்களுக்கு தடம் - தமிழ்நாட்டின் பொக்கிஷங்கள் எனும் பெட்டியினை நினைவுப்பரிசாக வழங்கியதில் பெருமையடைகிறேன்.
மரபை நவீனத்துடன் இணைப்பதன் வழியாக, நமது திறன்மிகு கைவினைக் கலைஞர்களுக்கு உலகளாவிய இயங்குதளத்தையும் வாய்ப்புகளையும் வழங்கி, நமது பண்பாட்டு மரபு பாதுகாக்கப்படுவதையும் வளர்ச்சி பெறுவதையும் ‘தடம்’ உறுதி செய்யும். நமது பண்பாட்டுப் பெருமையைக் கொண்டாவோம், முன்னேற்றுவோம் என பதிவிட்டுள்ளார்.