சென்னை: கட்டணமில்லா பேருந்து பயண அட்டை டிசம்பர் வரை பயணம் செய்யும் வகையில் அனுமதி வழங்கப்படுவதாக போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில், மாற்றுத்திறனாளிகள், கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை இணையதளம் வாயிலாக பெற்றிடும் வகையில் கடந்த 2023ம் ஆண்டு செப்.7ம் தேதி முதல் முதற்கட்டமாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தில் செயல்படுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள பயனாளிகள் இணையதளம் வழியாக பெறும் வசதிக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை முழுமையாக செயல்படுத்த, மாவட்ட அளவில் முகாம்கள் நடத்த வேண்டி உள்ளதால், ஏற்கனவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் அக்.31ம் தேதி வரை செல்லத்தக்க கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை டிசம்பர் வரை மேலும் இரண்டு மாத காலத்திற்க்கு நீட்டித்து பயணிகள் சிரமமின்றி பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.
+
Advertisement


