மதுரை : மதுரை ரயில்வே கோட்டத்தில் பொறியியல் பராமரிப்பு பணிகளுக்காக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வே அறிக்கை: பராமரிப்பு பணிகளையொட்டி ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் ஆக. 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் மற்றும் செங்கோட்டை இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். ரயில் திண்டுக்கல்லில் நிறுத்தப்படும்.
செங்கோட்டையில் இருந்து அதிகாலை 5.10 மணிக்கு புறப்படும் செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ் ஆக. 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் செங்கோட்டை மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். இந்த ரயில் திண்டுக்கல்லில் இருந்து 11.25 மணிக்கு புறப்படும்.
திருச்சி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் வரும் 11, 12, 13, 14, 18, 19, 20, 21, 25, 26, 28 ஆகிய தேதிகளில் காலை 7.05 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும். மானாமதுரை மற்றும் ராமேஸ்வரம் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். இந்த ரயில் மானாமதுரையில் சிறிது நேரம் நிறுத்தப்படும். ராமேஸ்வரத்திலிருந்து வரும் 11, 12, 13, 14, 18, 19, 20, 21, 25, 26, 28 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம் - திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரம் மற்றும் மானாமதுரை இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். இந்த ரயில் மாலை 4.55 மணிக்கு மானாமதுரையில் இருந்து புறப்படும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.