பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு பிளஸ் 2-மார்ச் 2, 10ம் வகுப்பு-மார்ச் 11: மே மாதம் ரிசல்ட்
சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் நேற்று வெளியிட்டார். அதன்படி பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 11ம் தேதியும் தொடங்குகின்றன. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: தமிழகம்...
ஆலங்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார்: அதிமுக பாஜவின் கிளை கழகமாக செயல்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை: ஆலங்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்து வந்தவர் மனோஜ் பாண்டியன். அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். அதாவது ஓபிஎஸ் 2017ம் ஆண்டு சசிகலாவை எதிர்த்து தர்ம...
பீகார் முதற்கட்ட தேர்தல் 121 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது: நாளை ஓட்டுப்பதிவு
பாட்னா: பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு முதற்கட்ட தேர்தல் நடக்கும் 121 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது. அங்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் நவம்பர் 6ல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 18 மாவட்டங்களில் உள்ள...
எஸ்ஐஆரை எதிர்த்து மேற்கு வங்கத்தில் பேரணி தகுதியான ஒரு வாக்காளரை நீக்கினாலும் மோடி அரசு கவிழும்: முதல்வர் மம்தா அதிரடி
கொல்கத்தா: தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரப்பிரேதசம், குஜராத், புதுச்சேரி, ராஜஸ்தான், சட்டீஸ்கர், கோவா, கேரளா, அந்தமான் நிக்கோபர், லட்சத்தீவு, மபி ஆகிய 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கெடுப்பு பணிகள் நேற்று தொடங்கின. தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் இந்த சிறப்பு தீவிர திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் மேற்கு...
எஸ்ஐஆர் தொடர்பாக பாஜ வாக்குச்சாவடி முகவர்களுக்கு சிறப்பு பயிற்சி: தலைவர்கள் விளக்கம்
சென்னை: எஸ்ஐஆர் தொடர்பாக பாஜ வாக்குச்சாவடி முகவர்களுக்கு சிறப்பு பயிற்சியை தலைவர்கள் நேற்று அளித்தனர். தமிழக பாஜ சார்பில் 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் வகையில் மாநில அளவிலான தொகுதி அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார். இதில்...
சேலம் அருகே பயங்கரம் அன்புமணி ஆதரவாளர்கள் தாக்குதல் உயிர் தப்பிய ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ: 6கார்களின் கண்ணாடிகள் உடைப்பு ; கல்வீச்சு; 9 பேர் படுகாயம்
வாழப்பாடி: சேலம் அருகே ராமதாஸ் ஆதரவு பாமக எம்எல்ஏ அருள் காரை வழிமறித்து அன்புமணி தரப்பினர் தாக்குதல் நடத்தினர். அப்போது கார்களை வழிமறித்து கண்ணாடியை உடைத்தும் கற்களை வீசியும், உருட்டுக்கட்டையால் இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதில் 9 பேர் படுகாயமடைந்தனர். அருள் எம்எல்ஏ அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பாமகவில் தந்தை, மகன் மோதலையடுத்து ராமதாஸ் தரப்பினரும்,...
எளிய பாஸ்வேர்டால் ஏற்பட்ட விபரீதம்; குஜராத் மருத்துவமனை சிசிடிவி காட்சிகள் ‘ஆபாச’ சந்தையில் விற்பனை: 50,000 வீடியோக்களை திருடிய கும்பலால் பரபரப்பு
அகமதாபாத்: மருத்துவமனையின் சிசிடிவி கேமராக்களுக்கு வைக்கப்பட்டிருந்த மிக எளிய பாஸ்வேர்டை பயன்படுத்தி, பெண் நோயாளிகளின் அந்தரங்க வீடியோக்களைத் திருடி ஆபாச சந்தையில் விற்ற கொடூர சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள பாயல் மகப்பேறு மருத்துவமனையில், நோயாளிகளின் பாதுகாப்புக்காகப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா நெட்வொர்க்கிற்கு ‘admin123’ என்ற மிக எளிமையான பாஸ்வேர்டை பயன்படுத்தியுள்ளனர்....
ஆங்கில மொழி பேச தெரியாததால் அமெரிக்காவில் 7,200 டிரைவர்கள் வேலையிழப்பு: பஞ்சாப், அரியானா ஓட்டுநர்கள் தவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆங்கில மொழித் தேர்வில் தோல்வியடைந்ததால், இந்தியர்கள் உட்பட ஆயிரக்கணக்கான லாரி ஓட்டுநர்கள் பணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் வர்த்தக ரீதியான லாரி போன்ற கனரக வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்கள், பொதுமக்களுடன் உரையாடவும், சாலை விதிக் குறியீடுகளைப் புரிந்துகொள்ளவும், போக்குவரத்து போலீசிடம் பேசவும், பதிவேடுகளைப் பராமரிக்கவும் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாய...
உலகக் கோப்பையை வென்ற கையோடு இசையமைப்பாளரை கரம்பிடிக்கும் வீராங்கனை: மகாராஷ்டிராவில் 20ம் தேதி திருமணம்
சங்க்லி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தனது நீண்ட நாள் காதலரான இசையமைப்பாளர் பலாஷ் முச்சாலை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும், அதிரடி தொடக்க ஆட்டக்காரருமான ஸ்மிருதி மந்தனாவும், பிரபல இசையமைப்பாளர் பலாஷ் முச்சாலும் கடந்த 2019ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர்....
