Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வால்பாறையில் இதமான வெயில் நீர்நிலைகளில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

வால்பாறை : வால்பாறையில் கடந்த 2 நாட்களாக வெயில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக நீர்நிலைகளில் குளித்து மகிழ்ந்தனர்.கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் சின்னக்கல்லார், நீராறு அணை, நல்லமுடி , தலநார் காட்சி முனைகள் உள்ளிட்ட பகுதிகள் உள்ளது. பலத்த மழையால் சில வாரமாக பாதுகாப்புக்காக அவைகள் திறக்கப்படவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓரளவு இயல்பு நிலை திரும்பியதும் அணைகள் திறக்கப்பட்டன.இதில் வால்பாறை வந்த சுற்றுலா பயணிகள் கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி சோலையார் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 900 கனஅடியாக குறைந்தது. இருப்பினும் 165 அடி உயரம் உள்ள அணையின் நீர் மட்டம் நேற்று 101 அடியை எட்டியது. அணையில் 2671 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

நேற்று முதல் சோலையார் 1 மின் நிலையம் 889 கன அடி நீரில் இயக்கப்பட்டு, வெளியேறும் நீர் பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது. அதிகபட்சமாக சின்னக்கல்லாரில் 19 மிமீ. மழை பதிவாகி உள்ளது. சிங்கோனா 15, வால்பாறை 17 சோலையார் அணையில் 14 மிமீ. மழை பதிவாகி உள்ளது.