வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு முன்னாள் டிஜிபியின் முன்னாள் மருமகள் விடுதலை: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் டிஜிபி திலகவதி முன்னாள் மருமகள் சுருதி திலக்கை விடுதலை செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை விருகம்பாக்கம் பகுதியில் கணவருடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சுருதி திலக் தனது வீட்டில் வீட்டு வேலை செய்த பணிப் பெண் சபினா என்பவரை சாதி பெயரை சொல்லி திட்டியதாக விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கபட்டது.
இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு தீர்ப்பளித்த நீதிபதி, வழக்கில் காவல்துறை தரப்பில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனவே சுருதியை விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.