Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டிஎன்பிஎஸ்சி தொகுதி -II மற்றும் IIA -ற்கான முதல் நிலைதேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள்

சென்னை: தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி -II மற்றும் IIA -ற்கான முதல் நிலைதேர்விற்கு (TNPSC-GROUP-II AND IIAPrelims)இலவச பயிற்சி வகுப்புகள் 18-07-2024 முதல் நடைபெறவுள்ளது, சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்

தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி - IIவிற்கு 507 காலிப்பணியிடங்களும், தொகுதி IIA விற்கு 1,820 காலிப்பணியிடங்களும், மொத்தமாக (TNPSC-GROUP-II &IIA ) 2327 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 20.06.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆகும்.

தொகுதி -II மற்றும் IIA -ற்கான முதல் நிலைதேர்விற்கு (TNPSC-GROUP-II AND IIAPrelims) இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை கிண்டியிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் 18-07-2024 முதல் (திங்கள் முதல் வெள்ளி வரை) நடத்தப்பட உள்ளன.

இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல், ஆதார் அட்டையின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை கிண்டியிலுள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக அலுவலக வேலைநாட்களில் அணுகுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றார்கள்.

மேலும், விவரங்களுக்கு, decgc.chennai24@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம், சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.