திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே மாணவன் உயிரிழப்பை அடுத்து பள்ளிக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு சீல் வைக்க வலியுறுத்தி மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு உதவிபெறும் பள்ளியின் விடுதியில் தங்கி படித்த மாணவன், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டான்.பள்ளி வளாகத்தில் இருக்கும் பூட்டப்பட்டிருந்த கிணற்றில் இருந்து மாணவன் முகிலன் சடலமாக மீட்கப்பட்டது. கடந்த 1ம் தேதி மாணவன் முகிலன் பள்ளிக்கு வராத நிலையில் நேற்று கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
+
Advertisement