திருமலை: புனிதமான மார்கழி மாதம் வரும் 16ம் தேதி பிற்பகல் 1.23 மணிக்கு தொடங்குவதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 17ம் தேதி முதல் சுப்ரபாத சேவைக்கு பதிலாக பெண் ஆழ்வாரான ஆண்டாள் தாயார் எழுதிய திருப்பாவை பாசுரபாராயணம் நடக்க உள்ளது. ஆண்டாள் எழுதிய 30 பாசுரங்களில் ஒவ்வொரு நாளும் ஜனவரி 14ம் தேதி வரை ஏழுமலையான் முன் பாடப்படும். இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
+
Advertisement


