Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருப்பதி கோயில் உண்டியல் திருட்டை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்: ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில், உண்டியல் காணிக்கை எண்ணும் பரக்காமணியில் பணி புரிந்து வந்த ரவிக்குமார் என்பவர் உண்டியல் காணிக்கை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. அதனடிப்டையில் அவரிடம் மேற்கொண்ட சோதனையில் 72 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மறைத்து வைத்திருந்தது உறுதியானது. இதுதொடர்பான வழக்கு, ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் இருந்தும், ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதோடு தேவஸ்தான இ.ஓ. மற்றும் முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். பக்தர்கள் பக்தியுடன் செலுத்திய உண்டியல் காணிக்கை திருட்டைச் செய்த திருடனிடமிருந்து கடந்த ஆட்சியில் இருந்த அதிகாரிகள், அறங்காவலர் குழுவினர் நன்கொடை பெற்று கொண்டனர்.

பக்தர்களின் உணர்வுகளை சமரசம் செய்து வழக்கை தீர்த்து கொண்டனர். இது தவறு. இந்த வழக்கை முழுமையாக விசாரிக்க வேண்டும். டிஜி நிலை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். ஏசிபி சார்பாக டிஜி நிலை அதிகாரி ஒருவர் ரவிகுமாரின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். பரக்காமணி திருட்டு வழக்கில் ரவிக்குமார் மற்றும் ஏவிஎஸ்ஓ சதீஷ்குமார் ஆகியோர் தேவஸ்தான அனுமதியின்றி சமரசம் செய்து கொண்டதாக இ.ஓ. மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனால், பரக்காமணி வழக்கை சிபிசிஐடி அவசரமாக விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையை வரும் டிசம்பர் 2ம் தேதிக்குள் முடிக்க கெடு விதிக்கப்பட்டது.