சென்னை: அரசு கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். முதுநிலைப் பாடப்பிரிவுக்கு விண்ணப்பப் பதிவு இன்றுடன் முடிவடைந்த நிலையில் அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. முதுநிலை மாணவர்களின் தரவரிசை பட்டியல் ஆக.4ம் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். முதுநிலை மாணவர்களுக்கான வகுப்பு ஆகஸ்ட் 20ம் தேதி தொடங்கும் என்றும் கூறினார்.
+
Advertisement


