Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்சூர் தொகுதி பாஜ வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபிக்கு ரூ.4.07 கோடி சொத்து: தமிழகத்தில் ரூ. 1 கோடி முதலீடு

திருவனந்தபுரம்: திருச்சூர் தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபிக்கு ரூ.4.07 கோடி சொத்துக்கள் உள்ளன. தமிழகத்தில் ரூ.1 கோடிக்கு நிலத்தில் முதலீடு செய்துள்ளார்.

மலையாள நடிகரும், முன்னாள் மேலவை எம்பியுமான சுரேஷ் கோபி நாடாளுமன்ற தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் வேட்பு மனுவுடன் தன்னுடைய சொத்து விவரங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

அவை குறித்த விவரங்கள் வருமாறு: மொத்த சொத்து மதிப்பு ரூ.4,07,51,412.51 ஆகும். ரூ2.53 கோடி மதிப்புள்ள 1999 மாடல் டிராக்டர், மகீந்திரா வேன், ரூ39.90 லட்சம் மதிப்புள்ள ‘ஆடி கியூ 7’ கார், ரூ.26,82,400 மதிப்புள்ள 2 கேரவன்கள் உள்பட 8 வாகனங்கள் உள்ளன. பல வங்கிகளில் ரூ.61 லட்சம் கடனும், கையில் ரூ.44 ஆயிரமும் உள்ளது. ரூ53.30 லட்சம் மதிப்புள்ள 1025 கிராம் தங்கமும், வங்கிகளில் ரூ.24 லட்சம் முதலீடும் உள்ளது. கடந்த 2023- 2024ம் ஆண்டில் கிடைத்த வருமானம் ரூ4.68 கோடி ஆகும். மியூச்சுவல் பண்ட் மற்றும் பத்திரங்களில் ரூ.7 லட்சமும், தபால் வங்கிக் கணக்கு மற்றும் பாலிசிகளில் ரூ67 லட்சம் முதலீடும் உள்ளது.

திருநெல்வேலியில் 82.4 ஏக்கர் நிலமும், சைதாப்பேட்டையில் 40 சென்ட் விவசாய நிலமும் உள்ளது. இதன் மதிப்பு ரூ99.60 லட்சமாகும். திருவனந்தபுரம் சாஸ்தமங்கலத்தில் 2 சர்வே எண்களில் நிலம் உள்ளது. மனைவி ராதிகாவின் பெயரில் ரூ1.82 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. அவருக்கு ரூ54.60 லட்சம் மதிப்புள்ள 1050 கிராம் நகைகளும், ஒரு கேரவன் வேனும் உள்ளது. ராதிகாவின் வருமானம் ரூ4.13 லட்சமாகும்.