தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூன்று நாள் பயிற்சி வகுப்பு - “மீன் & இறால் மதிப்பு கூட்டப்பட்ட பயிற்சி” வரும் 15.4.2025 முதல் 17.4.2025 தேதி நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் இடம்: சமுதாயக்கூடம், உச்சிமேடு, கடலூர் மாவட்டம். இப்பயிற்சியில் கடல் மீன் இறால் போன்ற கடல் வாழ் பொருட்களைக் கொண்டு எவ்வாறு மதிப்பு கூட்டுதல் செய்து அதன்மூலம் புதிய வியாபாரம் தொடங்குதல் மற்றும் வியாபாரத்தை எவ்வாறு விரிவு படுத்தலாம் என்பதை பற்றியும் விரிவாக வகுப்புகள் எடுக்கப்படும். செய்முறை பயிற்சியும் நடத்தப்படும்.
மீன் பஜ்ஜி,மீன் சமோசா,மீன் சூப் தயாரித்தல், மீன் ஊறுகாய், இறால் ஊறுகாய், கணவாய் ஊறுகாய், சின்னாங்கண்ணி பொடி, இரால் பக்கோடா, கருவாடு ஊறுகாய், கருவாடு பொடி, மீனை எவ்வாறு கொள்முதல் செய்வது எவ்வாறு அதை சுத்தப்படுத்துவது எப்படி பதப்படுத்துவது எப்படி பேக்கிங் செய்வது எவ்வாறு வியாபாரம் செய்வது போன்றவற்றை பற்றி வகுப்புகள் எடுக்கப்படும். மேலும், இந்த பயிற்சியில் கலந்து கொள்வதன் மூலம் கடலோர மக்கள் மற்றும் கடலோரம் அல்லாத மக்களும் கடல் வாழ் பொருட்களை வைத்து அதனை மதிப்பு கூட்டி சுய தொழில் தொடங்குவதற்கு ஒரு அடித்தளமாய் இந்த பயிற்சி அமையும்.
சுயதொழில் செய்ய ஆர்வமுள்ள அனைவரும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சியின் இறுதியில் அரசு சான்றிதழ் வழங்கப்படும், பயிற்சியில் பங்கு பெற முன்பதிவு அவசியம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in
