Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உலக பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி வரை 11 நாட்கள் ஆண்டு பெருவிழா சிறப்பாக நடைபெறும். இதில் முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் ஆண்டுகளில் மட்டும் தங்கத் தேர் திருவிழாவாக நடைபெறும். அதன்படி கடந்த 2023ம் ஆண்டு தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தங்கத்தேர் திருவிழா நடைபெற்றது. இந்த ஆண்டு தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு பெருவிழா 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு 25-ந் தேதி மாலை 6 மணிக்கு கொடி பவனி நடைபெற்றது.  இன்று காலை 8.45 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்று பேராலயம் முன்புள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடியை பிஷப் ஸ்டீபன் ஏற்றி வைத்தார். பின்னர் 9.30 மணிக்கு திருப்பலி நடைபெற்று பகல் 12 மணிக்கு அன்னைக்கு பொன் மகுடத்தினை அருள்தந்தை ஆல்பா்ட் ஜான்சன் அணிவித்தார்.

திருவிழா நாட்களில் தினமும் காலை 4.30 மணிக்கு செபமாலை 1, 5 மணிக்கு முதல் திருப்பலி, 5.45 மணிக்கு இரண்டாம் திருப்பலி, பகல் 12 மணிக்கு செபமாலை 2, மாலை 3 மணிக்கு செபமாலை 3, மறையுரை, இரவு 7.15 மணிக்கு செபமாலை 4, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது. தினமும் இளையோர், முதியோர், ஆதரவற்றோர், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், மீனவர்கள், கப்பல் மாலுமிகள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினருக்கான சிறப்பு திருப்பலி நடைபெறும். மேலும், தூத்துக்குடி பகுதியை சேர்ந்த பல்வேறு பங்கு இறைமக்கள் திருயாத்திரையாக வந்து திருப்பலி நிறைவேற்றுவார்கள். ஆகஸ்ட் 4-ம் தேதி 10-ம் திருவிழா அன்று மாலை 7 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா சிறப்பு மாலை ஆராதனையும், இரவு 9 பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலியும், இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடைபெறுகிறது.

5ம் தேதி 4.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.30 மணிக்கு இரண்டாம் திருப்பலியும், 7.30 மணிக்கு பெருவிழா கூட்டுத் திருப்பலியும் 9 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட மக்களுக்கான திருப்பலியும் காலை 10 மணிக்கு முன்னாள் பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் உபகாரிகளுக்கான சிறப்பு திருப்பலியும், பகல் 12 மணிக்கு சிறப்பு நன்றி திருப்பலியும், மாலை 5 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நகர வீதிகளின் அன்னையின் திருவுருவ பவனி நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு தூய பனிமய அன்னைக்கு குடும்பங்களை ஓப்புக் கொடுத்தல் நற்கருகணை ஆசீர் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

கொடியேற்று விழா நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் இளம்பகவத், எஸ்பி அல்பா்ட் ஜான், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையா் பானோத் ம்ருகேந்தா்லால், துணை மேயர் ஜெனிட்டா, திமுக மாநில மீணவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் நிர்மல்ராஜ், வக்கீல் பாலகுருசுவாமி, அரசு வழக்கறிஞர் ஆனந்தகபரியேல்ராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல், இலக்கிய அணி அமைப்

பாளர் ஜீவன் ஜேக்கப், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமார், இளைஞா் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், கவுன்சிலர் ரிக்டா, பகுதி சபா உறுப்பினர் ஆா்தா் மச்சாது, மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் பெல்லா, வட்டச்செயலாளர்கள் டென்சிங், ரவிச்சந்திரன், லியோ ஜான்சன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், டாக்டா் மகிழ்ஜான்,

வட்டப்பிரதிநிதி பாஸ்கர், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பர், அல்பட், மணி மற்றும் அதிமுக மாநில வா்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன், மாநில துணைச்செயலாளர் ராஜா, முன்னாள் கவுன்சிலா்கள் அகஸ்டின், சகாயராஜ், முன்னாள் ேமலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், தவெ பொறுப்பாளர் அஜிதா ஆக்னல், குரூஸ்பர்னாந்து நற்பணி மன்ற தலைவர் ஹெர்மன்கில்ட், முன்னாள் கவுன்சிலர்கள் அருள், கோல்டன், ஆனந்தகுமாா் உள்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் மற்றும் பங்குத்தந்தை ஸ்டார்வின், உதவி பங்குத்தந்தை பிரவீன் ராசு, களப் பணியாளர் மிக்கேல் அருள்ராஜ், பங்கு பேரவை செயலாளர் எட்வின் பாண்டியன், துணைத்தலைவர் அண்டோ, பொருளாளர் சோரீஸ், இணை செயலாளர் பெனட், மற்றும் பங்குப் பேரவையினர், பங்கு மக்கள் செய்துள்ளனர். விழாவிற்கான பாதுகாப்பு பணியில் எஸ்பி அல்பா்ட் ஜான் தலைமையில் 2 ஏடிஎஸ்பிகள், 1 ஏஎஸ்பி, 5 டிஎஸ்.பிகள், 15 இன்ஸ்பெக்டர்கள் 35 எஸ்ஐக்கள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். இதற்கான கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஆலயவளாகம் அருகே தற்காலிகமாக கண்காணிப்பு கோபுரங்கள் போலீசார் அமைத்துள்ளனர்.

நேர்த்திக்கடன்

பனிமய மாதா ஆலய கொடியேற்றத்தை முன்னிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பக்தர்கள் நிறைகுடம் பால் மற்றும் வாழைப்பழம் தார் உள்ளிட்ட பல பொருட்கள் ஆகியவற்றை கொடிமரத்தின் முன் வைத்து வணங்கி கொடியேற்றம் முடிந்ததும் அனைவருக்கும் வழங்கினர். சிறு குழந்தைகளை பெரியவர்கள் கையில் தூக்கி சென்று கொடிமரத்தின் முன்பு உட்காரவைத்து கொண்டு சென்றனர். கொடியேற்றத்தை முன்னிட்டு சமாதனத்தை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட வெண்புறாக்கள் பறக்கவிடப்பட்டன. மற்றும் துறைமுகத்திலிருந்து சைரன் ஒலிப்பு ஒலிக்கப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.